சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நிலுவையில் உள்ள 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர வளாகத்தில் இடம்பெற்ற அவசர பரிசோதனை விஜயத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இணையவழி முறையின் ஊடாக சேவைகளை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களின் சாரதி அனுமதிப்பத்திரம் 12 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும் அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் காவல்துறையினரால் இரத்து செய்யப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி | Overdue Driver S License Within One Month

இந்த நிலையில், மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் என அனைத்து சாரதிகளையும்  சிறிலங்கா காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.