இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (01) ​​சற்று குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி! | The Value Of The Sri Lankan Rupee Has Fallen

 

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 289.08 ரூபாவாகவும், 297.65 ரூபாவாகவும் உள்ளது.

நேற்றைய தினம் ( டிசம்பர் 31) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 288.32 ரூபாவாகவும் 297.01 ரூபாவாகவும் காணப்பட்டது.

மத்திய கிழக்கு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது.