ஜனவரியில் அஸ்வெசும இரண்டாம் கட்ட நடவடிக்கை

ஜனவரியில் அஸ்வெசும இரண்டாம் கட்ட நடவடிக்கை

அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை அகில  இலங்கை ரீதியாக ஜனவரியில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன (Jayantha Wijeratne) தெரிவித்துள்ளார்.

மேற்படி குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் நிலுவைத் தொகையை வைப்பிலிடவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை அகில இலங்கை ரீதியாக ஜனவரியில் ஆரம்பிக்கப்பட உள்ளது. 

ஜனவரியில் அஸ்வெசும இரண்டாம் கட்ட நடவடிக்கை | Aswesuma Allowance 2025 Begins January இதற்கான பயிற்சி கருத்தரங்குகள் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் இடம்பெற்று வருகின்றது. 

அதன் தொடர்ச்சியாக நேற்று செவ்வாய்க்கிழமை (31) காரைதீவு பிரதேச செயலாளர் க.அருணன் வழிகாட்டலின் கீழ் காரைதீவு உதவி பிரதேச செயலாளர் செ.பார்த்திபன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் வளவாளர்களாக அம்பாறை மாவட்ட செயலக புள்ளிவிபர அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.முன்சீப், காரைதீவு பிரதேச செயலக புள்ளிவிபர அபிவிருத்தி உத்தியோகத்தர் சிராஜ் முனீர் ஆகியோர் பங்கு பற்றி விளக்கம் கொடுத்தனர்.