இடியுடன் கூடிய கனமழை: வெளியான எச்சரிக்கை

இடியுடன் கூடிய கனமழை: வெளியான எச்சரிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வு கூறப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (1.1.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய கனமழை: வெளியான எச்சரிக்கை | Today Weather Report In Tamil

மேல், சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மாவட்டத்தில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகபட்சமாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இடியுடன் கூடிய கனமழை: வெளியான எச்சரிக்கை | Today Weather Report In Tamil

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.