இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கைவரிசையை காட்டிய யாழ்ப்பாண திருடர்கள்!

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கைவரிசையை காட்டிய யாழ்ப்பாண திருடர்கள்!

இலங்கையில் உள்ள பல்வேறு பகுதிகளில் 21க்கும் அதிகமான வீடுகள் மற்றும் தங்க நகைக் கடைகளில் பணம், தங்க நகைகள், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்ட சந்தேக நபர்களை கண்டி, கலஹா பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19, 21, 22, 23 மற்றும் 26 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கைவரிசையை காட்டிய யாழ்ப்பாண திருடர்கள்! | Jaffna Thieves Involved Various Theft Many Places

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம், வவுனியா, ஊர்காவற்துறை, கம்பளை, கலஹா, நுவரெலியா, கந்தபொல மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள், கோவில்கள், தங்க நகைக் கடைகள் என்பனவற்றில் 4 ஆண்டுகளாக இந்தக் குழுவினர் புகுந்து கொள்ளையடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களுக்கு எதிராக இதுவரை 24 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கைவரிசையை காட்டிய யாழ்ப்பாண திருடர்கள்! | Jaffna Thieves Involved Various Theft Many Places சந்தேக நபர்களுக்கு எதிராக யாழ்ப்பாண எல்லைக்குள் மாத்திரம் 9 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர்

மேலும், நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையால், சந்தேக நபர்கள் அவ்வப்போது பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாடகைக்கு வீடுகளை எடுத்து அங்கிருந்து இந்த கொள்ளைச் சம்பவங்களைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கைவரிசையை காட்டிய யாழ்ப்பாண திருடர்கள்! | Jaffna Thieves Involved Various Theft Many Placesசந்தேக நபர்கள் திருடிய பணத்தை ஏற்கனவே செலவு செய்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள அடகு கடை ஒன்றில் திருடிய சில தங்க ஆபரணங்களே பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.