திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்ட மியான்மார் அகதிகள்

திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்ட மியான்மார் அகதிகள்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று(20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

படகில் வந்தவர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் நாமகள் வித்தியாலயத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்ட மியான்மார் அகதிகள் | Myanmar Refugees Brought To Trincomalee

அத்துடன் அவர்களுக்கான உணவு உட்பட ஏனைய வசதிகளை திருகோணமலை பட்டணம் சூழலும் பிரதேச செயலகம் முன்னெடுத்து வருவதோடு ஏனைய அரச திணைக்களங்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகளுடன் படகொன்று நேற்றையதினம்(19) கரை ஒதுங்கியிருந்தது.

திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்ட மியான்மார் அகதிகள் | Myanmar Refugees Brought To Trincomalee

படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளதாகவும், குறித்த படகில் 35 சிறுவர்களும் ஒரு கற்பிணி பெண் மற்றும் முதியவர்களும் அதில் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்ட மியான்மார் அகதிகள் | Myanmar Refugees Brought To Trincomalee

இந் நிலையில் நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைக்கு விரைந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சென்று பார்வையிட்டிருந்ததுடன் அவர்களுக்கான உலர் உணவுப்பொருட்களும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.