கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம் அஸ்வெசும நலன்களைப் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என அறிவித்தல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவௌ (Secretary to the Ministry of Education) தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்க பெறாத ஆனால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்கு உள்ளான பிள்ளைகளுக்கு உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தெரிவு செய்யும் பணி எதிர்வரும் நாட்களில் துரிதமாக மேற்கொள்ளப்படும் என செயலாளர் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Aswesuma Benefit Families New Announcement

இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கான மேலதிக மதிப்பீடு நேற்று (18) நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, ஐந்து வயது முதல் பதினாறு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு ஆறாயிரம் (6000) ரூபாய் கொடுப்பனவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.