வவுனியாவில் 10 மாதத்தில் 45 பேர் மாரடைப்பால் மரணம்

வவுனியாவில் 10 மாதத்தில் 45 பேர் மாரடைப்பால் மரணம்

  வவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் மரணம் அடைந்திருப்பதாக கூறப்படுகின்றது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 10 மாதத்தில் 45 பேர் மாரடைப்பால் மரணம் | 45 People Die Of Heart Attacks Vavuniya10 Months

இதன் பிரகாரம் 20 வயது தொடக்கம் 40 வயதுக்கு உட்பட்டவர்களில் ஒருவரும், 40 வயது தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் 13 பேரும், 60 வயது தொடக்கம் 100 வயதுக்கு உட்பட்டவர்களில் 31 பேருமாக 45 பேர் இவ்வாறு மாரடைப்பால் மரணமாகியுள்ளனர்.

அதேவேளை வவுனியாவில் மாரடைப்பால் மரணிப்போரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து காணப்பட்ட நிலையில் அதற்கான பல்வேறு காரணங்களும் சுகாதார திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.