தேர்தல் வேட்பாளர்களுக்காக வெளியிடப்படவுள்ள விசேட வர்த்தமானி
நாடாளுமன்றத் தேர்தலின் வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களின் விருப்பு இலக்கத்தை அறிவிக்கும் வர்த்தமானியே இன்று வெளியிடப்படவுள்ளது.
இதேவேளை பொதுத் தேர்தலுக்கான புதிய திகதி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
புதிய திகதியை அறிவிப்பதற்கு முன்னர் பல தரப்பினருடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. இருப்பினும் தேர்தலுக்கான புதிய திகதி இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும்.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கிய சுகாதார வழிகாட்டல்களை வர்த்தமானிப்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்,
தேர்தல் செலவு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நிதியமைச்சின் செயலாளரை தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் சந்திக்கவுள்ளனர்.
கொரோனா பரவல் அதன் அச்சம் காரணமாக பொதுத் தேர்தலுக்கான செலவு ரூபா 06 பில்லியனிலிருந்து 09 பில்லியன் வரை அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றதென அவர் தெரிவித்துள்ளார்.