படகு கவிழ்ந்ததில் தந்தையும் மகளும் மாயம்

படகு கவிழ்ந்ததில் தந்தையும் மகளும் மாயம்

சிறிய ரக படகொன்று மற்ற படகுடன் மோதி கவிழ்ந்ததில் தந்தை, மகள் என இருவர் காணாமல்போன சம்பவம் இன்று (24) காலை இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு முன்னக்கரை களப்பு பகுதியில் 7 பேர் பயணித்த இப்படகு கவிழ்ந்ததையடுத்து, 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

படகு கவிழ்ந்ததில் தந்தையும் மகளும் மாயம் | Father And Daughter Missing After Boat Capsizesசம்பவத்தில் 50 வயதுடைய தந்தையும் 20 வயது மகளும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவர்களில் மூவர் சிகிச்சை பெற்றுக்கொண்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும் காணாமல்போன தந்தையையும் மகளையும் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.