
மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
திறைசேரி உண்டியல்களை ஏல விற்பனை செய்வது குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி,125,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 27ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை செய்யப்படவுள்ளது.
182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளது.
மேலும் 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான மூன்றாவது மீளாய்வை நிறைவு செய்துள்ள சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் பணியாளர்கள் மட்ட இணக்கப்பாட்டை எட்டியுள்ளது.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மூன்றாவது மீளாய்வு தொடர்பான ஊடக சந்திப்பு இலங்கை மத்திய வங்கியில் இன்று (23) முற்பகல் இடம்பெற்ற போது கருத்துரைத்த பீட்டர் ப்ரூயர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.