கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை கொலை! தாய் மற்றும் மகள் காயம்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை கொலை! தாய் மற்றும் மகள் காயம்

காலி, தடல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்திருந்த நபர் ஒருவர், வீட்டிலிருந்த தந்தையைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதுடன் தாயையும் மகளையும் காயப்படுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (15.11.2024) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

47 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த 45 வயதுடைய தாயும் 15 வயதுடைய மகளும் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை கொலை! தாய் மற்றும் மகள் காயம் | Father Murdered After Being Attacked With A Weaponஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.