மதுவரி திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு மதுவரி திணைக்களத்தினால் (Excise department) மீண்டும் ஒருமுறை இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் சகல நிலுவை வரிகளையும் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலைக் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது.
அந்தவகையில், நவம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.