மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு(Batticaloa) - வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டுயானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(10.11.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, திக்கோடை தும்பாலைக் கிராமத்தைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான கார்த்திகோசு உருத்திரகாந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், தனது கருங்கல் உடைக்கும் இடத்தில் இருந்தபோதே காட்டு யானை தாக்குதலுக்கிலக்காகி அவர் உயிரிழந்துள்ளதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பிரதே பரிசோதனைக்காக வைக்கப்பட்டள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி | One Died Wild Elephant Attack In Batticaloaஇதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக காட்டுயானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.