நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (09) வரை 2348 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) நேற்று (09) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் நேற்று முன்தினம் மாத்திரம் 160 முறைப்படுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த முறைப்பாடுகளில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகாத நிலையில் தேர்தல் சட்டத்தை மீறிய அடிப்படையில் குறித்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் | Election Complaints Are Increasing Day By Day

இந்த நிலையில் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 20 வன்முறைச் சம்பவங்களும் தேர்தல் சட்டத்தினை மீறிய 2293 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த முறைப்பாடுகளில் 1861 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.