பெண்ணொருவர் வெட்டிக்கொலை
தனிப்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (09) மாலை இச்சம்பவம் வவுனியா ஈச்சங்குளம் அம்மிவைத்தான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
லைப்ஸ்டைல் செய்திகள்
Mutton Kongura: மட்டன் கோங்குரா செய்ய தெரியுமா? காரசாரமான ரெசிபி இதோ
26 December 2024
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024