காலியில் வெளிநாட்டு நாணயங்கள் - உருகிய தங்கக் கட்டிகளுடன் மூவர் கைது

காலியில் வெளிநாட்டு நாணயங்கள் - உருகிய தங்கக் கட்டிகளுடன் மூவர் கைது

காலியில் (Galle) ஐம்பது டொலர் வெளிநாட்டு நாணயங்களுடன் பல திருட்டுச் சம்பவங்களுடன் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பன்னம்கொட பாலத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி ஹிக்கடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், காலியில் புஸ்ஸா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 50 டொலர் வெளிநாட்டு நாணயங்களும் ஒரு ஜோடி கண்ணாடியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநபர்கள், காலி புஸ்ஸா பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 43 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

காலியில் வெளிநாட்டு நாணயங்கள் - உருகிய தங்கக் கட்டிகளுடன் மூவர் கைது | Arrested With 2 000 Usd And 43 Grams Molten Goldசந்தேகநபர்களிடம் இருந்து எட்டு கிராம் 840 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட 2,000 டொலர் வெளிநாட்டு நாணயம், 43 கிராம் எடையுள்ள உருகிய தங்கக் கட்டி மற்றும் வைரம் பதித்த தங்க மோதிரம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பில் ஹிக்கடுவ காவல்துறையினர் அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.