தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக குறைவடைந்த தங்க விலை நேற்று அதிகரித்த நிலையில் இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்தவகையில், இன்றைய (07.11.2024) நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 778,961 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,480 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 219,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் | Gold Price Rate Today In Srilankaஅதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,190 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 201,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,050 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 192,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 215,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 199,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.