இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் இன்றைய தினம் மாலை வரையில் 14 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இன்று தொற்றுறுதி செய்யப்பட்டவர்களில் 10 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள்.
மீதம் 4 பேர் சென்னையில் இருந்து அண்மையில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று வரையில் இலங்கையில் மொத்தமாக ஆயிரத:து 849 பேர் கொவிட்19 நோயினால் பீடிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது.
அதேநேரம் இன்றையதினமும் 49 பேர் குணமடைந்து வெளியேறினர்.
இதன்படி இன்றுவரையில் 990 பேர் கொவிட்19 தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதன்படி இன்னும் 848 பேர் கொவிட்19 நோயால் பீடிக்கப்பட்டநிலையில் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றன.