![](https://yarlosai.com/storage/app/news/a0fcea7f924372e85af8eb914913bab6.jpg)
நாளை சில பகுதிகளுக்கு மின் தடை
நானுஓயா, லிந்துலை ஆகிய பிரதேசங்களிலுள்ள பல பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை மின்சார தடை ஏற்படுத்தப்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய பாராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மின்சார தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் நுவரெலியா பிராந்தியக் கிளை தெரிவித்துள்ளது.
இதன்படி, லிந்துலை நகரம், வைத்தியசாலை, லெமிலியர், சமர்செட், மட்டுக்கலை, சென்கூம்ஸ்;, கல்கந்தவத்தை, வங்கிஓயா, ரதெல்ல, உடரதல்ல ஆகிய பெருந்தோட்ட பிரதேசங்களுக்குட்பட்ட பகுதிகளில் இந்த மின்சார விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.