கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை - பொதுமக்களுக்கு வெளியான அறிவுறுத்தல்

கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை - பொதுமக்களுக்கு வெளியான அறிவுறுத்தல்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி (kanday), நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (24.09.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

வட மேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை, மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை - பொதுமக்களுக்கு வெளியான அறிவுறுத்தல் | Heavy Rain With Thunder Weather In Sri Lankaமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

சிலாபத்திலிருந்து காலி ஊடாகமாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.