இடியுடன் கூடிய மழை ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

இடியுடன் கூடிய மழை ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

இலங்கையில் இன்று (18) தென் மாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல் | Thunderstorms Notice Public Today Weather News

மத்திய மலைநாடுகளின் மேற்கு சரிவுகளிலும் வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-45)கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.