இலங்கையில் அதிகரித்து செல்லும் தங்கத்தின் விலை

இலங்கையில் அதிகரித்து செல்லும் தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது தொடர்ச்சியாக மீண்டும் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இன்றைய (2024.09.11) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 759,183 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்து செல்லும் தங்கத்தின் விலை | Gold Price In Sri Lanka For Happiness Peoples

 

24 கரட் தங்க கிராம் 26,780 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 214,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,550 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 196,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,440 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 187,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி 24 கரட் தங்கம் 202,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

இலங்கையில் அதிகரித்து செல்லும் தங்கத்தின் விலை | Gold Price In Sri Lanka For Happiness Peoples

அத்துடன் 22 கரட் தங்கம் 186,800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,350 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது