நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றிரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும்.

மேல், சபரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு | Weather Alert In Sri Lanka Todayஅத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் மணித்தியாலத்துக்கு 35 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.