இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது தொடர்ச்சியாக மீண்டும் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இன்றைய (09.05) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 748,242 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 கரட் தங்க கிராம் 26,400 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 211,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,200 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 193,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,100 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 184,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.