தபால் நிலைய அதிபர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

தபால் நிலைய அதிபர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

கொழும்பு கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள தபால் நிலையத்திற்குள் தூக்கில் தொங்கிய நிலையில், தபால் நிலைய அதிபரின் சடலம் காணப்பட்டதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வல்கம்முல்லை அலிவலப்பல்லவைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தபால் நிலைய அதிபர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார் | Postmaster Made Wrong Decision Committed Suicideகொலன்னாவ, மீதொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து உப தபால் நிலையத்திற்கு பணிபுரிய வந்த அவர், மாலை 6 மணி வரை வீட்டுக்கு வராதது குறித்து உறவினர் ஒருவர் வந்து பார்த்தபோது , தபால் நிலையத்தின் முன் கதவு திறந்திருந்ததாகவும்,

இரண்டாவது கதவு உள்ளே இருந்து மூடப்பட்டதாகவும் காணப்பட்ட நிலையில் சந்தேகமடைந்த உறவினர் 119 பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் முறைப்பாடு செய்யதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.