பாடசாலை மாணவி வன்கொடுமை : மேலும் மூன்று மாணவர்கள் சிக்கினர்

பாடசாலை மாணவி வன்கொடுமை : மேலும் மூன்று மாணவர்கள் சிக்கினர்

தனமல்வில பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் லுனுகம்வெஹர பிரதேசத்தை சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனமல்வில காவல்துறையிடம் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம், லுணுகம்வெஹர காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து மூன்று மாணவர்களும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான மாணவர்கள் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் நண்பர்கள் எனவும், கடந்த ஏப்ரல் மாதம் லுனுகம்வெஹர பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற பக்மஹா விழாவை காண பாடசாலை மாணவி வந்த போது சந்தேகத்திற்குரிய மூன்று மாணவர்கள் பாடசாலையில் வைத்து மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாடசாலை மாணவி வன்கொடுமை : மேலும் மூன்று மாணவர்கள் சிக்கினர் | Sexually Assaulting Three More Students Arrested

கைது செய்யப்பட்ட மாணவர்கள் 16 மற்றும் 15 வயதுடையவர்களாவர்.  

இந்த சம்பவத்தை மூடி மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் உட்பட மூவர் நேற்று (14) நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவி வன்கொடுமை : மேலும் மூன்று மாணவர்கள் சிக்கினர் | Sexually Assaulting Three More Students Arrested