கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழரின் சடலம் மீட்பு

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழரின் சடலம் மீட்பு

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டி கரையோர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

61 வயதான செல்வநாயகம் பொனிபஸ் சிட்னி மனோகரா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நாரஹேன்பிட்டி பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளர்.

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழரின் சடலம் மீட்பு | Body Found In Colombo Today

அண்மையில் கொழும்பு வோட் பிளேஸ் பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், முச்சக்கரவண்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.