முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
நாட்டில் அடுத்த 10 நாட்களுக்குள் முட்டை இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான கொள்முதல் நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை 50 ரூபாவாக காணப்படுவதன் காரணமாக, முட்டை இறக்குமதி தொடர்பில் அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, மாதம் ஒன்றுக்கு 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக அரசாங்கம் (Government of Sri Lanka) அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த தீர்மானத்திற்கு அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.