அடுத்தவர் மனைவி மீது ஆசை வைத்தவர் அடித்துக்கொலை

அடுத்தவர் மனைவி மீது ஆசை வைத்தவர் அடித்துக்கொலை

 மனைவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றவரை அடித்துக்கொலை செய்த சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொத்துபிட்டிய பின்னகொடெல்ல பிரதேசத்தில் கடந்த 11ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்தவர் மனைவி மீது ஆசை வைத்தவர் அடித்துக்கொலை | Man Tried Inappropriately Wife Beaten To Death

சம்பவத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தாக்குதலில் உயிரிழந்த நபரின் தலை இரண்டாக பிளவுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான மரத்துண்டு ஒன்று காணப்பட்டதையடுத்து, பொலிஸ் மோப்ப நாயொன்று ஈடுபடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அடுத்தவர் மனைவி மீது ஆசை வைத்தவர் அடித்துக்கொலை | Man Tried Inappropriately Wife Beaten To Death

இதன்போது லயன் குடியிருப்பு அறையொன்றின் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவரின் அருகில் அந்த மோப்ப நாய் சென்று நின்றுள்ளது. அவரை கைது செய்து விசாரணை நடத்தியதையடுத்து, கொலையில் தொடர்புடைய கணவன், மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலையானவர் கைதான பெண்ணிடம் இரண்டு தடவைகள் முறையற்ற வகையில் நடந்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கணவருக்கு தெரியப்படுத்தியதையடுத்து கடந்த 11ஆம் திகதி இரவு அவரது வீட்டுக்குச் சென்று தாக்கிய நிலையில் நபர் தப்பி ஓடிய போது துரத்திச் சென்று மீண்டும் தாக்கியதாகவும் பெண் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் பின சந்தேகநபர்கள் கலவானை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.