3 லட்சம் ரூபாய் கடன் சலுகை....!

3 லட்சம் ரூபாய் கடன் சலுகை....!

கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளை மீள் திருத்தும் பணிகளுக்காக 3 லட்சம் ரூபாய் கடன் சலுகை வழங்க இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கிடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இது தொடர்பில் வங்கிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்தார்.