
78 வயது பாட்டியை தகாத முறைக்கு உட்படுத்திய 17 வயது மாணவன் : நீதிமன்றம் அளித்த உத்தரவு
பலாங்கொடை தூர்வெல ஓயாவில் 78 வயதுடைய திருமணமான பெண்ணொருவர் தகாத முறைக்கு உட்படுத்தி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய பாடசாலை மாணவனை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை பதில் நீதவான் டி.இ.எம். சந்திரசேகரன் உத்தரவிட்டார்.
சந்தேகநபரின் உடல், உள மற்றும் சமூக நோய்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும், சந்தேக நபரை மரபணு( DNA) பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
பலாங்கொடை முகுனமலை பிரதேசத்தில் வசித்த எம்.எல். சிரியாவதி என்ற பெண்ணொருவர் கடந்த 27ஆம் திகதி குளிப்பதற்கு தொரவெல ஓயாவிற்கு சென்றிருந்த நிலையில், அங்கு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் வைத்தியர்களுக்கு மரணம் தொடர்பில் சந்தேகம் இருந்தமையினால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதுடன் இது தொடர்பில் நீதிமன்றில் காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.