தங்க விலையில் திடீர் மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கு தகவல்

தங்க விலையில் திடீர் மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கு தகவல்

தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

எனினும் இலங்கையில் கடந்த சில தினங்களாக உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலையானது நேற்று குறைவடைந்த நிலையில் இன்று (04) மீண்டும் அதிகரித்துள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 718,718 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,360 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 202,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,250 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ( 22 karat gold 8 grams) 186,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் திடீர் மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கு தகவல் | Today Gold Price In Sri Lanka World Gold Market21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,190 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 177,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 194,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் திடீர் மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கு தகவல் | Today Gold Price In Sri Lanka World Gold Marketஅதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று180,000  ரூபாவாக பதிவாகியுள்ளது.