லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி

ஹங்வெல்ல - வனஹகொட பிரதேசத்தில் ஹைலெவல் வீதியில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது இன்று (28.06.2024) காலை இடம்பெற்றுள்ளது.

அவிசாவளை(Avissawella) நோக்கி சென்று கொண்டிருந்த லொறியில் எரிபொருள் தீர்ந்த நிலையில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த போது, ​​வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி | Youth Killed In Motorcycle Collision With Lorry

இதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஹங்வெல்ல, கிராம்புல பிரதேசத்தைச் சேர்ந்த ஜனித் பிரியதர்ஷன என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.