
O/L மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க உபகுழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், இந்த பரிந்துரைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், அத்தியாவசியப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் இதர வகை ஸ்டேஷனரிகளின் விலைகளைக் குறைக்க தலையிடுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.