இன்றைய வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இன்றைய வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மி.மீ. 50 வரை கனமழை பெய்யக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் | Today Weather In Srilanka To Tamil Peoples

வடமேற்கு மாகாணம் மற்றும் மணாலை மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் அவ்வப்போது கி.மீ. (40-50) வரை பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.