14 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பெண்ணை விடுதலை செய்த நீதிமன்றம்! நடந்தது என்ன..

14 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பெண்ணை விடுதலை செய்த நீதிமன்றம்! நடந்தது என்ன..

கம்பஹாவில் 14 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் சந்தேக நபரான 45 வயதுடைய பெண்ணை எவ்வித தண்டனையும் இன்றி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த கம்பஹா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

14 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பெண்ணை விடுதலை செய்த நீதிமன்றம்! நடந்தது என்ன? | Woman Abusive Relationship With 14 Year Old Boy

இதேவேளை, குறித்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட பெண் மனவள்ர்ச்சி குறைப்பாடு உள்ளவர் என தீர்ப்பை அறிவித்து நீதிபதி விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் அந்தக் குற்றச் செயலை செய்ய எண்ணத்துடன் இருந்தார் என்பதை நிரூபிக்கப்படவில்லையென கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் முதிர்ச்சியற்ற மன நிலையே இந்த குற்றத்துக்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பிட்டார்.

14 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பெண்ணை விடுதலை செய்த நீதிமன்றம்! நடந்தது என்ன? | Woman Abusive Relationship With 14 Year Old Boy

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவன் ஹைப்போமேனியா மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்கில் சாட்சியமளித்த நிபுணர் மனநல மருத்துவர் கே.டி.சி. பெர்னாண்டோவின் அறிக்கையில் தெளிவாக இருப்பதாக கூறிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவரின் உடல் மற்றும் மன அம்சங்களை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்றும் கூறினார்.

இருவரின் சம்மதத்துடன்தான் இந்த தவறு நடந்துள்ளது என்பது நிரூபணமாகியுள்ளதாக கூறிய நீதிபதி, செயலின் தீவிரத்தை புரிந்து கொள்ளும் திறன் மற்றும் பொறுப்பு இருவருக்குமே இல்லை என்பது தெளிவாக தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.

14 வயது சிறுவனின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், மேகவத்தை பொலிஸார் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.