தென்னிங்கையில் நடந்த பரபரப்பு - வௌ்ளை வானில் கடத்தப்பட்ட இளைஞன்

தென்னிங்கையில் நடந்த பரபரப்பு - வௌ்ளை வானில் கடத்தப்பட்ட இளைஞன்

தென்னிலங்கையில் வெள்ளை வானில் இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

களுத்துறை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவரே கடத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வெள்ளை வானில் வந்து கும்பலால் ஹென்டியங்கல தேவாலயத்திற்கு அருகில் வைத்து இளைஞன் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன இளைஞனின் தாயார் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தென்னிங்கையில் நடந்த பரபரப்பு - வௌ்ளை வானில் கடத்தப்பட்ட இளைஞன் | Young Boy Kidnapping In Kalutara Todayஅதற்கமைய கடத்தலுடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தல் கும்பலை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.