வாடிக்கையாளர்களுக்கு இலங்கை வங்கி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

வாடிக்கையாளர்களுக்கு இலங்கை வங்கி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

இணைய பரிவர்த்தனைகளை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை வங்கி (Bank of Sri Lanka) தனது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில்,  online பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது பூட்டு சின்னம் Hypertext Transfer Protocol (HTTP) உள்ள இணையதளங்களை மட்டும் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பூட்டு சின்னம் அல்லது https என்ற இணைய பயன்பாட்டு நெறிமுறை இல்லாமல் இணையதளங்களைப் பயன்படுத்தும் போது சைபர் ஊடுருவல் மூலம் உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைத் திருடலாம் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி  இணையம் மூலமான வங்கி கொடுக்கல் வாங்கள் பரிவர்த்தனைகளுக்கு பூட்டு சின்னம் இல்லாத இணையதளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் எவ்வாறு தொடர வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை வங்கி விளக்கமளித்துள்ளது.

மேலும், நிதி மோசடிக்கு சிக்காமல் கொடுக்கல் வாங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை வங்கி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.