இலங்கையில் நடக்கும் பாலியல் கொடூரம் ; வேலை தேடும் பெண்களை இலக்கு வைத்து நடந்த மோசடி

இலங்கையில் நடக்கும் பாலியல் கொடூரம் ; வேலை தேடும் பெண்களை இலக்கு வைத்து நடந்த மோசடி

நான்கு வருடங்களாக வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து பலவிதமான பாலியல் செயல்களில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இவ்வாறு வந்த பெண்ணொருவரை இந்த தம்பதியினர் அடைத்து வைத்து பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தி வீடியோ எடுத்து பணத்திற்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் நடக்கும் பாலியல் கொடூரம் ; வேலை தேடும் பெண்களை இலக்கு வைத்து நடந்த மோசடி | Scams Targeted At Job Seekers For Srilanka 4 Years

நுகேகொடை சிறுவர் மற்றும் பெண்கள் குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர், கொழும்பு நுகேகொடையில் உள்ள இந்த வீட்டிற்கு வந்த பதுளை மற்றும் வெலேகெதர பிரதேசங்களை சேர்ந்த இரண்டு பெண்கள் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.