இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோய் தொற்று: அடையாளம் காணப்பட்டுள்ள அபாய வலயங்கள்

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோய் தொற்று: அடையாளம் காணப்பட்டுள்ள அபாய வலயங்கள்

 கொழும்பு (Colombo) உட்பட 15 மாவட்டங்களில் உள்ள 71 பிரிவுகள் டெங்கு காய்ச்சலுக்கான அதிக ஆபத்துள்ள வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு மே 26 மற்றும் ஜூன் 1 இடைப்பட்ட காலப்பகுதிக்குள் நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளதனை அவதானித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக காணப்பட்டுள்ளது. 

எனினும், கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட எண்ணிக்கையின்படி தென்மேற்கு பருவமழை தொடங்கும் மே மாதத்திலிருந்து நோயின் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோய் தொற்று: அடையாளம் காணப்பட்டுள்ள அபாய வலயங்கள் | Dengue Desease In 71 Several Areas

இந்நிலையில், டெங்கு நோயால் 2024ஆம் ஆண்டில் இதுவரை ஒன்பது இறப்புக்களுடன் கிட்டத்தட்ட 25,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.