சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின

சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் நேற்று (04) இரவு வெளியிடப்பட்டுள்ளன.

மீள் மதிப்பீட்டுக்காக 49,312 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும், 250,311 விடைத்தாள்கள் மீள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின | Ol Exam Resuly Recorrection Released

இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளதுடன்,452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.