இன்று முதல் பொது மன்னிப்பு காலம்: வெளியானது அறிவிப்பு

இன்று முதல் பொது மன்னிப்பு காலம்: வெளியானது அறிவிப்பு

நீண்ட நாட்களாக விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத  இலங்கை இராணுவத்தின் இராணுவ வீரர்களுக்கு இன்று (20) முதல் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்தக் காலப்பகுதியில் தாங்கள் சேர்ந்த படைப்பிரிவு மையத்தை தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Amnesty period for army personnel

இராணுவ அடையாள அட்டையின் நகல், தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப் பத்திரம், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் புகைப்பட நகல் இங்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இராணுவம் அறிவித்துள்ளது.