
உயர்தர பெறுபேறுகளுக்காக காத்திருந்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்
மோட்டார் சைக்கிள் பாரவூர்தியுடன் மோதியதில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக கோனாபினுவல காவல்துறையினர் தெரிவித்தனர்.
அம்பலாங்கொட தர்மசோக கல்லூரியில் கல்வி கற்கும் தில்மித் சேனிய வைஹேன என்ற மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
தர்மாசோகா கல்லூரியில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய இம்மாணவன் இறக்கும் போது பெறுபேறுகளுக்காகக் காத்திருந்தான் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த இந்த மாணவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் ஐந்து நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.