போதைப்பொருளுடன் சிக்கிய சிறிலங்கா முன்னாள் இராணுவத் தளபதி..!

போதைப்பொருளுடன் சிக்கிய சிறிலங்கா முன்னாள் இராணுவத் தளபதி..!

அம்பலாங்கொடை கஹவேயில் உள்ள வீடொன்றில் 26 இலட்சம் ரூபா பெறுமதியான மின்சார உபகரணங்கள் மற்றும் கீல்கள் என்பவற்றை திருடிய தென்னிலங்கையில் சக்தி வாய்ந்த பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடைய ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ மேஜர் ஒருவரை 4600 மி.கி.ஹெரோயினுடன் அம்பலாங்கொடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சந்தேக நபர் சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேஜர் என அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அம்பலாங்கொடை காவல்துறையில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருளுடன் சிக்கிய சிறிலங்கா முன்னாள் இராணுவத் தளபதி | A Former Army Chief Caught With Drugsதொழிலை நடத்துவதற்காக டுபாயில் இருந்து இந்நாட்டிற்கு அனுப்பப்பட்ட மின்விளக்குகள், வயர்கள், மின் உபகரணங்கள், கீல்கள் போன்றவற்றில் இருந்து 26 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது வீட்டில் தற்காலிகமாகத் தங்கியுள்ள சந்தேகநபர் இந்தத் திருட்டைச் செய்துள்ளதாகவும், அவர் வீட்டில் வைத்திருந்த பாஸர் லைட்டை விற்பனை செய்ய முயற்சிப்பதாக தனது நண்பர் மூலம் தகவல் கிடைத்ததாகவும் முறைப்பாட்டாளர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரை விசாரணைக்கு உட்படுத்தியதையடுத்து பெறுமதியான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

போதைப்பொருளுடன் சிக்கிய சிறிலங்கா முன்னாள் இராணுவத் தளபதி | A Former Army Chief Caught With Drugsஅம்பலாங்கொடை காவல்துறையினர்  சந்தேகநபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.