அம்பாந்தோட்டையில் 12 வயது சிறுவன் வெட்டிக்கொலை: தந்தை படுகாயம்

அம்பாந்தோட்டையில் 12 வயது சிறுவன் வெட்டிக்கொலை: தந்தை படுகாயம்

அம்பாந்தோட்டை (Hambantota) - பெலியத்தை பிரதேசத்தில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தந்தையை கூரிய ஆயுத்தினால் தாக்கி காயப்படுத்திய கும்பல், மகனை வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று (17.04.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது 12 வயதுடைய சிறுவனே மேற்படி சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 38 வயதுடைய தந்தை படுகாயம் அடைந்த நிலையில் பெலியத்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காணித் தகராறு காரணமாக இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அம்பாந்தோட்டையில் 12 வயது சிறுவன் வெட்டிக்கொலை: தந்தை படுகாயம் | 12 Year Old Boy Hacked To Death In Hambantota

மேலும் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பியோடியுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.