ஓய்வூதியகாரர்கள் தொடர்பில் அரசின் அதிரடி நடவடிக்கை!!

ஓய்வூதியகாரர்கள் தொடர்பில் அரசின் அதிரடி நடவடிக்கை!!

இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றுள்ள 485 பேரின் ஓய்வூதியம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான செல்லுபடியாகும் உயிர்வாழ்ச் சான்றிதழை வழங்காத காரணத்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியம் பெறுவோர் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு ஆண்டுக்கு ஒருமுறை உயிர்வாழ் சான்றிதழை ஓய்வூதியத் திணைக்களத்திடம் வழங்குவது கட்டாயமாகும். இல்லையெனில் ஓய்வூதியத் தொகையை நிறுத்த ஓய்வூதிய திணைக்களம் நடவடிக்கை எடுக்கும்.

இதேவேளை, 2023ஆம் ஆண்டு 1061 பேரின் ஓய்வூதியம் செல்லுபடியாகும் சான்றிதழ் வழங்காத காரணத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன், அதில் 576 பேர் சான்றிதழைப் புதுப்பித்துள்ளனர்.

 

மேலும், 2022ஆம் ஆண்டு செல்லுபடியாகும் உயிர்வாழ்ச் சான்றிதழ் வழங்காததால், 2833 பேரின் ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இதுவரை 1250 பேர் மட்டுமே தங்கள் சான்றிதழை புதுப்பித்துள்ளனர்.

எவ்வாறாயினும், செல்லுபடியாகும் சான்றிதழ்கள் வழங்கப்படாமையால் அவர்களின் ஓய்வூதியம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

உரிய சான்றிதழ்

அதனை மீண்டும் செயற்படுத்துவதற்கு ஓய்வூதியம் பெறுவோர் உரிய சான்றிதழ்களை தூதரகத்திற்கு தனிப்பட்ட முறையில் வழங்க வேண்டும் எனவும் திணைக்களம் கூறுகிறது.

ஓய்வூதியகாரர்கள் தொடர்பில் அரசின் அதிரடி நடவடிக்கை | Sri Lanka Pension Scheme New Rulesவசிப்பிட சான்றிதழை தூதரகத்தால் இலவசமாக சான்றளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.