கடந்த 24 மணி நேரத்தில் 244 பேர் கைது!

கடந்த 24 மணி நேரத்தில் 244 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கைகளின் போது 244 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சந்தேக நபர்களில் 240 பேர் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடமிருந்து ஹெரோயின் 104 கிராம் 705 மில்லிகிராம், ஐஸ் 58 கிராம் 324 மில்லிகிராம், கஞ்சா 191 கிராம் 165 மில்லிகிராம், மாவா 86 கிராம் 65 மில்லி கிராம், போதை மருந்துகள் 35 கிராம் 86 மில்லிகிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 240 சந்தேக நபர்களில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் காவல்துறை விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 13 சந்தேக நபர்களும், அழைப்பாணையின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 11 பேரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 244 பேர் கைது! | 244 People Arrested In 24 Hours Under Yukthiyaகுற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் கைது செய்யப்பட்ட 04 சந்தேக நபர்களும் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான நான்கு திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டவர்கள் ஆவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.