கத்தரிக்கோலால் தாக்கி நபரொருவர் கொலை!!

கத்தரிக்கோலால் தாக்கி நபரொருவர் கொலை!!

ஆலையபற்று - திப்பட்டுவாகம (Alayapattru - Thippattuvagama) பகுதியில் கத்தரிக்கோலால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொலை சம்பவமானது நேற்று (14.04.2024) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தனிப்பட்ட பகை காரணமாக குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

கொலை செய்யப்பட்ட நபர் 37 வயது மதிக்கத்தக்கவரென பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேநேரம், கத்தரிக்கோல் மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி கொழும்பு- கிராண்ட்பாஸ் பகுதியில் கத்தரிக்கோலால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.