இஸ்ரேல் செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இஸ்ரேல் செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் போர்ச்சூழ்நிலை காரணமாக இஸ்ரேல் விமான நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Sl And Israel Flights Temporarily Suspended

எனவே எதிர்வரும் நாட்களில் இலங்கையர்கள் இஸ்ரேல் வருவதற்கு காத்திருந்தால், உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து திகதியை திருத்தியமைக்குமாறு தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.